செய்தி விவரங்கள்

நாசாவின் அடுத்த சாதனை- வாய் பிளக்க தயாராகுங்கள் மக்களே.!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான 'நாசா', தொடர்ச்சியாக விண்வெளி குறித்த ஆய்வுகளை  நடத்தி வருகிறது. சனிக்கோளினை பற்றி  ஆய்வு செய்வதற்காக  கடந்த 1997 ஆம் ஆண்டு 'கெசினி' எனும்  விண்கலத்தை அனுப்பியது.

கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சனிக்கோள் குறித்து பல்வேறு தகவல்களை வழங்கியது கெசினி விண்கலம். தற்போது, சனிக்கோளின் புகைப்படத்தினை கெசினி விண்கலம் மூலமாக வெளியிட்டுள்ளது நாசா.

சனிக்கோளில் விடியல் எவ்வாறு இருக்கும் என்பதை இந்தப் புகைப்படம் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும், சனிக்கோளை சுற்றியிருக்கும் வளையங்களையும் கெசினி அழகாகப் படம்பிடித்துள்ளது. இருள் சூழ்ந்த சனிக்கோளைச்சுற்றிப் பனிப்படலம்போல அதன் வளையங்கள் புகைப்படத்தில் பதிவாகியுள்ளன.

சனிக்கோளிலிருந்து சுமார் 6,20,000 மைல் தூரத்தில் இருந்து இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதியன்று எடுக்கப்பட்ட இந்தப்புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு