செய்தி விவரங்கள்

விக்னேஸ்வரன் – சம்பந்தன் இடையே விரைவில் முக்கிய பேச்சு

எதிர்கட்சித் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது, முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், விரைவில் நேரில் சந்தித்துப் பேச எதிர்பார்த்திருப்பதாக, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வடக்கு மாகாண கல்வி மற்றும் விவசாய அமைச்சர்களின் நியமனம் தொடர்பாக கலந்துரையாடவும், ஏனைய பிரச்சினைகள் குறித்து ஆராயவும், இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் இந்த வாரம் சந்தித்துப் பேசுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான நாடாளுமன்றக் குழுவொன்றுடன் இரா. சம்பந்தன், ஐந்து நாள் பயணமாக ஜேர்மனுக்கு சென்றுள்ளார்.

அவர் நாடு திரும்பியதும், இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு