செய்தி விவரங்கள்

ரஜினி 'கேப்டனுக்கு' தூசு மாதிரி - 'பிரேமலதா' கெத்து பேட்டி.!

தேமுதிக கட்சியின் தலைவரான விஜயகாந்த் அவர்களின் மனைவியும், அக்கட்சியின் மகளிரணி தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்வியொன்றினுக்கு பதிலளித்த அவர் "ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து பலமுறை பேசியாகிவிட்டது. எப்போதெல்லாம் காவிரி பிரச்சனை எழுகிறதோ அப்போதேல்லாம் ரஜினி பற்றி பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக அவரது மொழி குறித்து கூடுதலாக பேசுவார்கள். தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா வேற்று மொழிக்காரர் தான்.

கருணாநிதியின் மொழி என்னவென்பதில் கூட மாற்றுக்கருத்து உள்ளது. ஆகவே, மொழி மட்டுமே முதல்வருக்கான தகுதியாகிவிடாது.

கலைஞர், ஜெயலலிதா போன்றவர்களையெல்லாம் அரசியல் களத்தில் எதிர்கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்; எனவே எங்களுக்கு ரஜினியின் அரசியல் வருகையானது எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்திவிடாது" என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு