செய்தி விவரங்கள்

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட நினைவு மண்டபம்- எடப்பாடி பழனிசாமி.!

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட நினைவு மண்டபம் அமைக்கப்படுமென, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற போது இது தொடர்பாக பேசிய அவர் "மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னையில் அவரின் நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

இதற்காக உலகளாவிய கட்டிட கலைஞர்கள், நிறுவனங்களிடம் இருந்து வரைபடங்களை பெறுவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.  எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம், சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது" என பேசினார்.

Share this article

மேலும் தமிழ் செய்திகளுக்கு ...

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு