செய்தி விவரங்கள்

இந்தியை திணிக்க முயல்கிறது பாஜக' - சீத்தாராம் யெச்சூரி.!

நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய 'தமிழர் உரிமை மாநாட்டில்' மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ் மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்னன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு, கீழடியில் அருங்காட்சியகம் அமைந்திட வேண்டும் உள்ளிட்ட வேண்டும் என்ற முழக்கங்களை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இம்மாநாட்டில், பேசிய  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி "இந்தியா பல இன மக்கள் மற்றும் மொழி பேசுவோர்களைக் கொண்ட நாடு, இங்கு இந்துத்துவ கொள்கைகளை திணிக்க முயல்வதனைப் போலவே; தற்போது இந்தி மொழியினையும் திணிக்க அதீத முயற்சிகளை மேற்கொள்கிறது பாஜக அரசு. இங்கு வாழ்கிற அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்" என பேசினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு