செய்தி விவரங்கள்

ரம்ஜான் பண்டிகை மூலம் காஷ்மீரில் அமைதி நிலவத் துவங்கட்டும் - ராஜ்நாத் சிங்.!

நாடு முழுவதும் இஸ்லாமிய மக்கள், ரமலான் தினத்தை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் பலரும் ரம்ஜான் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் "இந்த ரம்ஜான் திருநாளானது, காஷ்மீரில் அமைதியையும், சகோதரத்துவத்தையும் தழைக்கச்செய்யட்டும். மனிதர்களுக்கிடையேயான புரிதலே மகிழ்ச்சியை நிலைக்கச்செய்யும்" என தம் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சப்சார் அஹமது கொல்லப்பட்டது முதல் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக வன்முறைகள் நிகழ்ந்து வருவதும், அதன் காரணமாக, 4ஜி இணைய சேவைகள் தடை செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு