செய்தி விவரங்கள்

குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி- பின்னணி என்ன.?

அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்குச் சென்று நாடு திரும்பியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரண்டு நாள் பயணமாக தமது  சொந்த மாநிலமான குஜராத் செல்ல உள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் பிரதமர் மோடி.

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு மோடி செல்கிறார். அங்கு சமண மதத் துறவி ராஜ்சந்திராவின் உருவம் பொறித்த புதிய நாணயம், அஞ்சல் தலையை வெளியிடுகிறார். ராஜ்சந்திரா, மகாத்மா காந்தியின் ஆன்மிக குருவாகக் கருதப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,  ராஜ் கோட்டில் 18,000 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 35 கோடி செலவில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதோடு. தொடர்ந்து மாலையில் ஆஜி அணைக்கட்டுக்கு செல்லும் மோடி, அங்கு நர்மதை நதி நீரை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அந்த அணைக்கட்டு நர்மதை நதி நீரால் நிரப்பப்பட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள நிலையில், பிரதமரின் குஜராத் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு