செய்தி விவரங்கள்

நாடாளுமன்ற மோதல்களும் நாகரீகமற்ற அரசியலும் நிலவரம் நிகழ்ச்சியில் விமர்சனம்

நிலவரம் நிகழ்ச்சியில் மத்திய வங்கியில்  இடம்பெற்ற பிணை முறி மோசடி குறித்து நாடாளுமன்றில் ஏற்பட்ட கை கலப்பு தொடர்பாக ஐ.பி.சி தமிழ் வானொலி நிகழ்ச்சியில் விமர்சிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மோதல்களும் நாகரீகமற்ற அரசியலும் நிலவரம் நிகழ்ச்சியில்  விமர்சனம்

அரசாங்க தரப்பு எதிர்தரப்பு உறுப்பினர்கள் கை கலப்பில் ஈடுபட்டனர். தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்தினர். இது இலங்கை  அரசியல் வரலாற்றில் மிகவும் மோசமான  செயற்பாடு என விமர்சிக்கப்பட்டது. 

முன்னைய காலங்களிலும் இவ்வாறான கூச்சல் , குழப்பங்கள்  கை கலப்புகள்  ஏற்பட்டிருந்தன. ஆனாலும்,  சட்டை கிழிந்து இரத்தம் வழியும் அளவிற்கு மோதல்கள்  இடம்பெற்றதாக கூற முடியாது.

பிணை முறி ஊழல் விவகாரத்தை மூடி மறைப்பதற்கு  பிரதமர் ரணில் விக்ரமசிங்க,  கையாண்ட அணுகுமுறை தவறானது.

ஆனால் அதனை சுட்டிக்காட்டுவதற்கு  கூட்டு எதிர்க்கட்சி  நடந்துக் கொண்ட முறை  அரசியல்  நாகரீகமற்ற  பண்பாடு என்று  குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ஸ மேற்கொண்ட ஊழல் மோசடிகளை நல்லாட்சி அரசாங்கம் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக  விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில், பிணை முறி மோசடியை மூடி மறைக்க மஹிந்த ராஜபக்ஸவின் ஊழல் மோசடிகளை முன்னிலைப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றும் நிலவரம் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்பட்டது.

பத்திரிகையாளர் அ.நிக்ஸன்  ஊடகவியலாளர் எஸ்.கிருபா இது தொடர்பாக உரையாடுகின்றனர்.

இதன் ஒளி, ஒலி வடிவங்கள்  கீழே தரப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு