செய்தி விவரங்கள்

'சித்தாத்தங்களுக்கு இடையேயான போட்டியே இது' - மீரா குமாரி.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளராக,பீகார் முன்னாள் ஆளுநர்  ராம் நாத் கோவிந்த்  என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேவேளையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக  முன்னாள் மக்களவ சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மீரா குமார் "சமூக நீதி, ஜனநாயகத்தை காத்தல் உள்ளிட்டவைக்காகவே குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறேன். தத்துவங்களுக்கு இடையேயான  போட்டியாகவே இதனைக் கருத வேண்டுமேயொழிய, தலித்துகளுக்கு இடையேயான  போட்டியான இதனை பார்க்க கூடாது" 

"குஜராத்தில் இருக்கும் சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்துதான் எனது பிரசாரத்தைத் தொடங்க உள்ளேன். நிதிஷ்குமாரிடம் ஆதரவு கோருவது குறித்து இன்னும் முடிவு செய்திட வில்லை" என குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு