செய்தி விவரங்கள்

அமைச்சர்களை அவசரமாக அழைத்த மைத்திரி;முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்?

அமைச்சர்களை அவசரமாக அழைத்த மைத்திரி;முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்களையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிற்கு அழைத்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கான முயற்சிகளில் அதிருப்தியடைந்த அமைச்சர்கள் சிலர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்படியான நிலையில் அடுத்தகட்ட நகர்வு, அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அனைத்து அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தன்னை சந்திக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இந்த சந்திப்பிற்கு வராதவர்கள், மஹிந்த ராஜபக்சவுடன் அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கான முயற்சியில் மும்முரமாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு