செய்தி விவரங்கள்

தேர்தல் ஆணையகத்தில் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பத்தில் மாற்றம்; ஜெ. தீபா புகார்!

தேர்தல் ஆணையகத்தில் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பத்தில் மாற்றம்; ஜெ. தீபா புகார்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் போது ஜெ.தீபா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஜெ. தீபா மனுவில் பல்வேறு பிரிவுகளில் தகவல்களை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அவருடைய மனுவை ஆய்வு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, ஜெ.தீபாவின் மனுவை நிராகரித்தார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடி செய்துள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் ஜெ. தீபா புகார் அளித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்த பின் ஜெ.தீபா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”என்னுடைய வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக செய்தி தெரியவந்ததும் தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்க சென்றேன். அப்போது என்னுடைய விண்ணப்பத்தில் சில பகுதிகளை நான் நிரப்பவில்லை என்றார். என்னுடைய அசல் விண்ணப்பத்தைக் காட்ட கோரிக்கை விடுத்தேன், முதலில் காட்ட முடியாது என்றார்கள், பின்னர் என்னுடைய தரப்பில் வலியுறுத்தப்பட்டதும் காட்டினார்கள், அப்போதுதான் எனக்கு பெரும் அதிர்ச்சி நேரிட்டது. அவ் விண்ணப்பம் நான் கொடுத்தது கிடையாது என தெரிந்து கொண்டேன்.

தேர்தல் ஆணையகத்தில் பரிசீலிக்கப்பட்ட விண்ணப்பம் நான் அளித்த விண்ணப்பம் கிடையாது. என்னுடைய விண்ணப்பத்தில் 2 தாள்கள் மாற்றப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. நான் வேட்பு மனு தாக்கல் செய்தால் அதனை நிராகரிக்க வைப்போம் என தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார்கள்.” என கூறினார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு