செய்தி விவரங்கள்

துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே குக்கர்...அசராத தினகரன்

துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே குக்கர்...அசராத தினகரன்

துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே தங்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் சுயச்சையாக போட்டியிடும் தினகரன் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.

தொப்பி, கிரிக்கெட் மட்டை, விசீல் என மூன்று சின்னங்களின் எதையாவது ஒதுக்குமாறு அவர் தேர்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தார். இந்நிலையில் தொப்பி சின்னத்தை கொங்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம். மேலும் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தினகரன் துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கவே தனக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தினகரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என கூறிய தினகரன் குக்கர் சின்னத்தில் நின்றாலும் ஆர்.கே.நகர் தொகுதியில் நான் வெற்றிபெறுவேன் என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு