செய்தி விவரங்கள்

சுஷ்மாவுக்கு வீடியோ மூலம் பதிலடி கொடுத்தது காங்கிரஸ்.!

தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், பாஜக தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக 'ராம் நாத் கோவிந்த்' என்பவரை அறிவித்தது. அதே சமயம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மக்களவை சபாநாயகராக 'மீரா குமார்' அறிவிக்கப்பட்டார்.

மத்திய வெளியுறவுத் தலைவர் சுஷ்மா தனது ட்வீட்டர் பக்கத்தில், காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது அக்கட்சியின் ஊழல் குறித்து சுஷ்மா பேசுகையில், மீரா குமார் இடையூறு செய்வது போன்று அந்த வீடியோ பதிவு இருந்தது. இது மக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தரப்பிலும் ஓர் வீடியோ பதிவானது வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சபாநாயகர் பதவியிலிருந்து  மீரா குமார் விடைபெறும் நிகழ்வில்  சுஷ்மா அவரைப் பாராட்டிப் பேசியதையும் அதில், 'நான் மீரா குமாரின் ரசிகை', என அவர் கூறுவதையும் வீடியோவாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

முன்னதாக, நேற்று மீரா குமார் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு