செய்தி விவரங்கள்

ஹாசினி கொலையாளி மும்பையில் தப்பியொட்டம்... தேடும் போலீஸ்

ஹாசினி கொலையாளி மும்பையில் தப்பியொட்டம்... தேடும் போலீஸ்

ஹாசினி கொலை வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் போலீசார் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டும் தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாசினி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த வாரம் தனது தாய் சரளாவை கொன்றுவிட்டு தலைமறைவானார்.

இதனைத்தொடர்ந்து தஷ்வந்தை தேடி மூன்று தனிப்படை காவல்துறையினர் மும்பைக்கு சென்றார். பாலியல் தொழிலாளியின் இல்லத்தில் தங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்தை இன்று சென்னை கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் சென்னைக்கு அழைத்துவர தஷ்வந்தை காவல்துறையினர் மும்பை விமானநிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனிடையே காவல்துறையினரை திசைதிருப்பிவிட்டு தஷ்வந்த தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தஷ்வந்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு