செய்தி விவரங்கள்

நல்லாட்சி அரசாங்கத்தை செயற்படுத்த விசேட குழு. ஜனாதிபதி பிரதமர் இணக்கம்

நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டு, அதன் பதவிக் காலம் முடிவடையும் வரை கொண்டு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற முக்கிய சந்திப்பில், இவ்வாறு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

விடே குழு ஒன்று நாளை புதன்கிழமை அமைக்கப்படும் எனவும் அந்தக் குழு நல்லாட்சி அரசாங்கத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு செயற்படுத்தும் பொறிமுறைகள் குறித்து ஆராயும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஐ.தே.க.வின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் எவரும் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட மறுத்தாக கூறிய ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர், சஜித் பிரேமதாச மாத்திரமே கருத்து வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தை செயற்படுத்த விசேட குழு. ஜனாதிபதி பிரதமர் இணக்கம்

ஆனாலும் ஜனாதிபதியும் பிரதமரும் பேசிய விடயங்கள் எதனையும், சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு முழுமையாகக் கூறவில்லை. ஆனால் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக இயங்கும் என்று சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

அதேவேளை அடுத்த இரண்டு ஆண்டுகளும் தொடரவுள்ள நல்லாட்சி அரசாங்கத்தில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகிப்பார் என்றும், வேறு எவரும் புதிய பிரதமாராக பதவியேற்கமாட்டார்கள் எனவும் ஐதேக வட்டாரங்கள் கூறியுள்ளன.

சபாநாயகராக பதவி வகிக்கும் ஐ.தே.க.வின் மூத்த உறுப்பினர் கரு ஜெயசூரியவை பிரதமராக தெரிவு செய்ய வேண்டும் என கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்தபோதும், ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிக்க வேண்டும் என பின்னர் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவடைந்த பின்னர் வெளியான முடிவுகளில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய பொது ஜன பெரமுன, 239 சபைகளை கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரு பிரதான கட்சிகளும் 2015 ஆம் ஆண்டு தை மாதம் முதல் இணைந்து நடத்தி வரும், நல்லாட்சி அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. 

இந்த நிலையில் பலசுற்றுப் பேச்சக்கள் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்றபோதும், இன்று இரவு எட்டு மணிக்கு இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் மாத்திரமே நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு நடத்த இணக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு