செய்தி விவரங்கள்

தினகரனுக்கு குக்கர் சின்னமா.. மேல்முறையீடு செய்திட முதல்வர் தரப்பு முடிவு.!

தினகரனுக்கு குக்கர் சின்னமா.. மேல்முறையீடு செய்திட முதல்வர் தரப்பு முடிவு.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவினுக்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டுவருகிறது அதிமுக. ஜெயலலிதாவின் உயிரித்தோழி சசிகலாவின் தலைமையில் ஓர் அணியும், எடப்பாடி - ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டுவருகின்றன. இதில், எடப்பாடி -ஓபிஎஸ் அணிகள் கட்சியையும் - ஆட்சியையும் கையகப்படுத்தியுள்ள சூழலில், தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர் என தெரிவித்துவந்தார் சசிகலா அணியின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன்.

ஆர்.கே சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அந்த சின்னத்தையே தமது அணிக்கு ஒதுக்கிடும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது. சில நாட்களுக்கு முன்னதாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளதுடன், அவர் பரிந்துரைத்துள்ள 3 பெயர்களில் ஏதேனும் ஒன்றினை வழங்கிடுமாறும் தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் தான், நாளை மதுரை மாவட்டம், மேலூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கவுள்ளார் தினகரன்.

கட்சி துவங்கவுள்ள மகிழ்ச்சியில் உள்ள தினகரனுக்கு அதிர்ச்சியளித்திடும் வகையில், தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதனை எதிர்த்து முதல்வர் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக, தினகரன் தனிப்பெரும் சக்தியாக வளர்வதனை எடப்பாடி -ஓபிஎஸ் அணிகள் முற்றாக விரும்பவில்லை என்பதையே அவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகள் காட்டுகின்றன.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு