செய்தி விவரங்கள்

கமல் நாகரீகமான அரசியலை நடத்தட்டும் - சொல்வது தமிழிசை.!

கமல் நாகரீகமான அரசியலை நடத்தட்டும் - சொல்வது தமிழிசை.!

நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் தாம் உறுப்பினராக இணைந்துவிட்டதாக தமது மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் மின்னஞ்சல் வந்ததாக செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்திருந்தார் பாஜக தலைவர் தமிழிசை. இதே கருத்தினை அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் தெரிவித்திருந்தார்.

கமல் நாகரீகமான அரசியலை நடத்தட்டும் - சொல்வது தமிழிசை.!

மேற்கண்டோரின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ள மக்கள் நீதி மய்யம், நாங்கள் யாருக்கும் கட்சியில் சேர அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, கட்சியில் சேர விரும்புகிறவர்கள் எங்களது இணையதளத்தில் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கே மின்னஞ்சல் அனுப்புகிறோம் என விளக்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்,  இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, கமல் முதலில் நாகரிகமான அரசியலை நடத்தட்டும் என விமர்சித்துள்ளார். தமிழிசையின் இந்த கருத்தினை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர் நெட்டிசன்கள். மிஸ்டுகால் மூலம் கட்சியில் உறுப்பினர்களை சேர்த்த நீங்கள் கமலை விமர்சிப்பதா என கேள்வியெழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு