செய்தி விவரங்கள்

ஆர்.கே.நகர் களத்தில் 59 வேட்பாளர்கள்... சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் களத்தில் 59 வேட்பாளர்கள்... சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரதான கட்சியின் வேட்பாளர்களை சேர்ந்து தற்போது 59 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இறுதி வேட்பாளர் பட்டியலின் வாயிலாக தற்போது வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சூழ்நிலையில் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

அதிமுக சார்பில் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டு உதயம், சுயச்சைகளாக தினகரன் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக களத்தில் உள்ளனர்.

தற்போது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சின்னம் தொடர்பாக தேர்தல் அதிகாரி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடைசிவரை ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நடிகர் விஷாலின் வேட்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபா மற்றும் இதர சுயச்சைகளின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு