செய்தி விவரங்கள்

குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் தொப்பி சின்னம்... கிடைக்குமா தினகரனுக்கு...

குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் தொப்பி சின்னம்... கிடைக்குமா தினகரனுக்கு...

தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு ஏராளமான சுயச்சை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளதால் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொப்பி சின்னம் தினகரனுக்கு கிடைக்கும் வாய்ப்பு மிக குறைவே என கூறப்படுகிறது.

சென்றமுறை ஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இம்முறையும் தனக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் சின்னத்தை ஒதுக்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளது என்றும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவித்துவிட்டது.

இதனிடையே தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கூடாது என முதல்வர் அணியும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் சில சுயச்சை வேட்பாளர்களும் தொப்பி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளதால் குலுக்கல் முறையில் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.    

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு