செய்தி விவரங்கள்

இனப்பிரச்சினை உள்ளக விவகாரம். ஜனாதிபதி மைத்திரி லன்டனில் விளக்கமளிப்பார்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அல்லது சர்வதேசத்தின் கணிசமான கவனத்தை ஜெனீவா மனித உரிமை கொண்டு வந்துள்ளது. 

ஆனாலும் மைத்திரி- ரணில் நல்லாட்சி அரசாங்கம், முடிந்த வரை இனப்பிரச்சினை விவகாரத்தில் சர்வதேச தலையீடுகளை தவிர்க்கும் ஏற்பாடுகளை செய்துள்ளதாக, கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை உள்ளக விவகாரம். ஜனாதிபதி மைத்திரி லன்டனில் விளக்கமளிப்பார்

2010ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட, நிபுணர்குழுவின் அறிக்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு 1948ஆம் ஆண்டில் இருந்து கூறப்படுகின்றது.

ஆனாலும், அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் சர்வதேசம், இலங்கை மீது நடவடிக்கை எடுக்க முடியாதவாறு, தீவிரமான இராஜதந்திர அணுகுமுறைகளை நல்லாட்சி அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு லன்டன் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனப்பிரச்சினை விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்தும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் திர்மானங்கள் அவசியமற்றவை எனவும் வெளியுலக இராஜதந்திரிகளுக்கு எடுத்துக் கூறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் ஆலோசகர்கள் சிலர் ஜனாதிபதியுடன் லன்டன் சென்றுள்ளதாகவும், அங்கு நடைபெறவுள்ள சிறிய கூட்டங்களில், அவர்கள் இது குறித்து விளக்கமளிப்பார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக ஐ.பி..சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு