செய்தி விவரங்கள்

340 சபைகளில் 77 மஹிந்த வசம்; 12 ரணிலிடம்- 6 மைத்திரியிடம்

340 சபைகளில் 77 மஹிந்த வசம்; 12 ரணிலிடம்- 6 மைத்திரியிடம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியாகிய 114 சபைகளுக்கான முடிவுகளின்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 77 சபைகளைக் கைப்பற்றி முன்னிலை வகிக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 15 சபைகளைக் கைப்பற்றி இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி 12 சபைகளைக் கைப்பற்றியுள்ள அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 4 சபைகளையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.

இவை தவிர, சுயேற்சைக் குழுக்கள் 4 சபைகளையும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒரு சபையையும், தேசிய காங்கிரஸ் ஒரு சபையையும் கைப்பற்றியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு