செய்தி விவரங்கள்

16 பேரை தத்தெடுக்கத் தயாராகும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

16 பேரை தத்தெடுக்கத் தயாராகும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சுப் பதவிகளில் இருந்து இராஜினா செய்துள்ள 6 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தன்பக்கமாக ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொலனறுவை தியபெத்தும பெரகும்கம      ஸ்ரீ ஞானோத்தியாராமய விகாரையில் சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியிலுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பிலிருந்து விலகிக்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.

எனினும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நிராகரித்த பிரதி சபாநாயகர் உட்பட அக்கட்சியிலுள்ள 6 அமைச்சர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்ததினால் சுதந்திரக் கட்சிக்குள் பிளவுநிலை ஏற்பட்டது.

அமைச்சர்களான திலங்க சுமத்திபால, தயாசிறி ஜயசேகர, எஸ்.பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, சந்திம வீரகொடி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அநுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 16 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து 6 அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்த அதேவேளை, எதிர்கட்சியாக செயற்பட தீர்மானித்ததாகவும் ஆனால் சுதந்திரக் கட்சியை பலப்படுத்தும் விவகாரத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவோம் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே அவர்களை தம்பக்கம் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு