செய்தி விவரங்கள்

விடாது கருப்பு.. விவேக்கை பின்தொடரும் வருமான வரித்துறை.!

விடாது கருப்பு.. விவேக்கை பின்தொடரும் வருமான வரித்துறை.!

வரி ஏய்ப்பு புகாரில் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

விடாது கருப்பு.. விவேக்கை பின்தொடரும் வருமான வரித்துறை.!

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஜெயா தொலைக்காட்சி தலைமை செயல் அதிகாரி விவேக் "வருமான வரித்துறையினரின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பினை அளித்தேன். மேலதிக விசாரணையின் போது ஆவணங்களுடன் அளிக்கவுள்ளேன். வரி எய்ப்பினை எவர் செய்தாலும் அது தவறு" என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சோதனையின் போது கைப்பற்ற ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்க ஜெயா டிவியின் சிஇஓவான விவேக் ஜெயராமன் நாளை மறுநாள் நேரில் ஆஜராகுமாறு வருமான வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு