செய்தி விவரங்கள்

இரண்டு பேரின் கதி என்ன… சந்தேகம் கிளப்பும் நடிகர் விஷால்

இரண்டு பேரின் கதி என்ன… சந்தேகம் கிளப்பும் நடிகர் விஷால்

தனக்காக வேட்புமனு படிவத்தில் கையெழுத்திட்ட தீபன் மற்றும் சுமதியின் தற்போதைய நிலை என்ன என்று தெரிவில்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த விஷாலுக்கு ஆதரவாக அதே தொகுதியை சேர்ந்த சுமதி, தீபன் என்ற இரண்டு வாக்காளர்கள் படிவத்தில் கையெழுத்திட்டிருந்தனர்.

 இதையடுத்து நடிகர் விஷாலின் தேர்தல் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக ஆர்.கே.நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுசாமி அறிவித்தார். தனக்கு ஆதரவாக கையொப்பம் இட்டவர்கள் மிரட்டப்பட்டதாக நடிகர் விஷால் அதற்கான ஆடியோ ஆதாரத்தை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சமர்பித்தார்.

இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ள தேர்தல் அதிகாரி வேலுசாமி மறுத்துவிட்டார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால் தனது வேட்பு மனுவை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை என்றும் ஆனால் தனக்காக வேட்பு மனு படிவத்தில் கையெழுத்திட்ட தீபன் மற்றும் சுமதியின் தற்போதையநிலையில் என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார். அவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம் எனவும் நடிகர் விஷால் தெரிவித்து இருக்கிறார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு