செய்தி விவரங்கள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா? இனி கவலை வேண்டாம்...

நம்மை சுற்றி எந்நேரமும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. நமது மூச்சுக் காற்று மூலமாகவோ அல்லது நம் உடலில் ஏற்படும் காயங்கள் மூலமாக அவை நம் உடலுக்குள் நுழைந்து விடுகின்றன.

ஆனால் அவற்றிடம் இருந்து, வெள்ளையணுக்கள் தான் நம்மை பாதுகாக்கின்றன. இவை நோய் உண்டாக்கும் பக்டீரியாக்களை கொன்று நம்மை பாதுகாக்கிறது.

ரத்தத்தில் ஒரு துளியை எடுத்து அதை மைக்ரோஸ்கோப் வழியாகப் பார்த்தால் அதில் உள்ள ஆப்ஸனின் என்ற பொருளின் வீரியம் தெரிந்து விடும். ரத்தம், பாகோசைட், ஆப்ஸனின் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் குறைபாடு ஏற்பட்டால் உடலினுள் பக்டீரியா புகுந்து நோய் உண்டாக்கி விடும். இதுபோன்ற நேரங்களில் ரத்தத்தில் வாக்சீனைச் செலுத்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கலாம்.

பீட்ரூட்டில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிப்பது மட்டுமின்றி சுத்தப்படுத்தவும் செய்கிறது.

கீரைகள் காய்கறிகளான பசலைக் கீரை, ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், இனிப்பு உருளைக்கிழங்குகள் ஆகிய அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியமானவை. இவை அனைத்தும் உடல் எடையை கட்டுபடுத்துவதுடன், உடலில் இரத்த அணுக்களையும் அதிகரிக்கும். அதிலும் கீரைகள் செரிமான மண்டலத்தை சரியாக இயங்கச் செய்யும்.

இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் தேவையான கனிமச்சத்து. இந்த சத்து எலும்புகளை மட்டும் வலுவாக்குவதில்லை, உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது. இந்த சத்து குறைவாக இருந்தால் அனீமியா நோயானது வரும். அந்த இரும்புச்சத்துக்கள் இறைச்சி, வெந்தயம், அஸ்பாரகஸ், பேரிச்சம் பழம், உருளைக்கிழங்கு, உலர்ந்த அத்திப்பழம், உலர் திராட்சை போன்றவற்றில் இருக்கும்.

இரும்புச்சத்து மற்ற உணவுப் பொருட்களை விட பாதாம் பருப்பில் அதிகம் இருக்கிறது. ஒரு நாளைக்கு 1 அவுண்ஸ் பாதாம் பருப்பை சாப்பிட்டால், உடலுக்கு 6% இரும்புச்சத்தானது கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு