செய்தி விவரங்கள்

போத்தல் நீரையே தினமும் பருகுகிரீர்களா? அவசியம் படியுங்கள்!

உயிர்களின் நிலைத்திருப்புக்கு நீர் இன்றியமையாதது என்பதை நீங்கள் அறிவீர்கள். நீர் இன்றி அமையாது இவ்வுலகு என்பதையும் அறிவீர்கள். அப்படியாயின் நீங்கள் பருகுகின்ற நீர் சுத்தமானதுதான் என்பதில் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?

உஙளுக்கு ஒன்று தெரியுமா? தானாக கெட்டுப்போகாத நல்ல பழக்கம் நம்ம தண்ணீருக்கு உண்டு. இதே குணம் தேனுக்கும் உண்டு; உப்புக்கும் உண்டு; சீனிக்கும் உண்டு. ஆனால் தண்ணீரிலிருந்து தேன் எவ்வாறு வேறுபடுகின்றதெனில் தண்ணீர் தன்னையன்றி பூமி மேற்பரப்பின் பிற பொருட்களோடு சேரும்போதே தனக்கான அந்தஸ்தை இழந்து கெட்டுப்போவதற்கான வழியைத் தேடுகின்றது. தேன் அவ்வாறு அல்ல. பண்டைக் காலத்தில் அதனுள் மிருகங்களின் இறைச்சி இட்டு நீண்ட காலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

சரி, போத்தலில் அடைத்த தண்ணீர் கெட்டுப் போகவில்லை என்பதை எதை வைத்து நம்புவீர்கள்? அங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் காலாவதித் திகதி பற்றிய விபரத்தை வைத்தா?

போத்தலின் காலாவதித் திகதி என்பது தண்ணீரின் மதிப்பைப் பரிசோதனை செய்வதற்கானதல்ல. மாறாக தண்ணீர் அடைக்கப்பட்டுள்ள போத்தலின் முடிவுகாலத்தை நிர்ணயம் செய்யும் கருவியே அது.

அதாவது போத்தல் தயாரிப்பின்போது பொலித்தீன் மூலப்பொருளுடன் கலக்கப்பட்ட இரசாயணங்கள் சில நாட்கள் களித்து தண்ணீருடன் உறவாடத் தொடங்கிவிடும். இந்த இரசாயணங்கள் தண்ணீருடன் கலந்து விட்டால் அது மாசுபட்டு விட்டது என்று தானே அர்த்தம்.

அத்தைகய தண்ணீரை நீங்களும் பருகினால், உங்கள் வயிறு மாசடைந்து முழு உடலுக்குமே தீங்கான விளைவுகளையல்லவா ஏற்படுத்தும்? அது தவிர காலாவதியான போத்தல்களைப் பாவிப்பது புற்று நோய் போன்ற அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளமையையும் கவனத்திற் கொள்ளுங்கள்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு