செய்தி விவரங்கள்

VIP 2 - Trailer Review - Dhanush, Amala Paul, Kajol

கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி மிக பெரும் வெற்றி பெற்ற தனுஷின்  வேலையில்லா பட்டதாரி படத்தின் தொடர்ச்சியான VIP 2 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கலைப்புலி S தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில், தனுஷ் அமலா பால், கஜோல், விவேக், சமுத்திரக்கனி போன்ற பலர் நடித்துள்ள படம் தான் VIP 2. இந்த படத்துக்கான கதை வசனம் தனுஷே எழுதியுள்ளார். பாடல்களுக்கு சீன் ரோல்டனும், பின்னணி இசை அனிருத்தும் செய்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர்  ஆரம்பமே என் பேரு ரகுவரன் நான் மறுபடியும் ஒரு வேலையில்லா பட்டதாரி என்று ஆரம்பிக்கும்போதே மிகப்பிரமாதமாய் உள்ளது.  கண்டிப்பான அப்பா ட்ரைலரில் சாதுவாக காணபடுகிறார். விவேக் உடனான காமெடி பகுதிகள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. கஜோல் நடிப்பு பிரமிக்கும் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தனுஷ் மற்றும் படக்குழுவிற்கு மிக சிறப்பான திரைப்படமாக உருவாகும் என ட்ரைலர் பார்த்தே நம்பிக்கை வருகிறது. காஜலின் நடிப்பை பார்க்கும்போது தான் புரிகிறது, அவர் ஏன் இதனை வருடங்களாக இந்திய சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக வளம் வருகிறார் என்று.

இந்த பட ட்ரைலரின் முழுமையான விமர்சனத்தை தெரிந்துகொள்ள மேலிருக்கும் Play Icon-ஐ அழுத்தி கேட்டுக்கொள்ளலாம்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு