செய்தி விவரங்கள்

மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

மன அழுத்தம் என்பது ஒரு உளவியல் ரீதியான ஒரு தாக்கம் ஆகும். இது அநேகமானவர்களிற்கு பாரிய பிரச்சனையாக அமைகின்றது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசும் போது  அவர்களிடம் நாம் கூறும் விடயங்களில் அவதானமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் நாம் செய்யும் அலட்சியமான செய்கைகளால் விபரீதமான சம்பவங்கள் கூட நிகழலாம். ஆகவே அவ்வாறானவர்களிடம் நாம் கூறும் விடயங்களிலோ செய்யும் செயல்களிலோ மிகவும் அவதானம் தேவை.

மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவரிடம் நம்முடைய பிரச்சனைகளை கூறக் கூடாது. அது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி விடும். மன அழுத்தத்தை எளிதில் நீக்கி விடமுடியாது. அச் சந்தர்ப்பங்களில் யாரிடமும் அவ்வளவு எளிதாக பேசத் தோன்றாது. அத்துடன் யாரும் அவர்களை சமாதானம் செய்யவும் அவர்களின் மனம் விரும்பாது. நம்முடைய அனைத்து உடல் பாதிப்புகளையும் மருத்துவ ரீதியாக அணுகுவது தவறு. தூக்க மாத்திரைகள் உட்கொள்வது கூட ஓரளவுக்கு தான் நிவாரணம் அளிக்கும். அவர்கள் தமது பிரச்சனைகளை யாரிடமாவது பகிர வேண்டும் என்று எண்ணுவார்கள். அதனால் அவர்களுக்காக நேரம் செலவிட்டு, அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.

இவ்வாறான நேரங்களில் அவர்களின் மனதை திசை திருப்புவது மிகச்சரியான தீர்வாக அமையாது. அதனால் பிரச்சனைகளை விட, அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஏதாவது ஒரு விடயத்தை கூறி, அவர்களை மேலும்  சிக்கலான நிலைக்கு தள்ளக்கூடாது. அத்துடன் அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்றோம்  என்ற பெயரில் "கவலைப்படாதீங்க" மற்றும் "சின்ன விடயத்திற்கு ஏன் வருத்தப்படுகின்றீர்கள்?" போன்ற கேள்விகளை கேட்கக்கூடாது. அது அவர்களின் பிரச்சனைகளை நாம் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு, பேசுவது போல் எண்ணி விடுவார்கள்.

மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களோடு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

மற்றவர்களின் பிரச்சனைகளை ஒப்பிட்டு அவர்களிற்கு ஆறுதல் கூறக் கூடாது. வெளிப்படையாக பிரச்சனையை பேசித் தீர்க்க எண்ணக்கூடாது. மாறாக அவர்களிடம் ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்க வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை நாம் உணர முடியாது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களை பிறருடன் பேசிப் பழக வைக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே இருக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்று உலவி வரச் செய்ய வேண்டும். மன அழுத்தத்துடன் இருப்பவர்களின் நிலை தலையில் பெரிய பாரத்தை தூக்கி வைத்திருப்பதற்கு சமன் ஆகவே அதனை இலகுவில் நீக்கி விடுதல் என்பது சாத்தியமற்றதொன்றாகும். எனவே அதனைப் படிப்படியாகவே இல்லாமல் செய்ய முடியும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு