செய்தி விவரங்கள்

தேள்கடி விஷம் நீங்க- சிறந்த இயற்கை வைத்திய குறிப்புகள்.!

எதிர்பாராத நேரங்களில், கொடிய விஷமுள்ள உயிரினங்கள் நமைத்  தீண்டிவிட்டால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு முன்பாக முதலுதவி மேற்கொள்வது சிறந்த ஒன்றாகும். மேலும், கொடிய விஷங்களை முறிக்க கூடிய இயற்கை மருத்துவ குறிப்புகளும் உள்ளன. அவற்றில், தேள் கடி  விஷத்தை  முறித்திடும் இயற்கை மருத்துவ குறிப்புகளை கீழே காணலாம்.

1.சீரகத்தை பொடிசெய்து அதனுடன் சிறிதளவு உப்பு, தேன் கலந்து சிறிது வெண்ணெய் சேர்த்து தேள் கடித்த இடத்தில் பூசி வந்தால் விஷம் எளிதில் முறியும்.

2.20 மிளகை எடுத்து தேங்காயுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வந்தால் தேள்கடி விஷம் குறையும். 

3.தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்கவில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

4.எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.

5.நவச்சாரத்தில் (அம்மோனியா உப்பு) சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி வலி குறையும்.

6. தூள் செய்த உப்பு, இரண்டு தேக்கரண்டியுடன் மயில் துத்தத்தையும் தூள் செய்து கலந்து தேள் கொட்டிய வாயில் வைத்து அழுந்தக் கட்டினால் தேள் கடி விஷம் குறையும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு