செய்தி விவரங்கள்

விஜய்யின் 62-வது படத்தின் கதையில் தண்ணீர் பிரச்சனையும் இருக்கிறதாம்.!

விஜய்யின் 62-வது படத்தின் கதையில் தண்ணீர் பிரச்சனையும் இருக்கிறதாம்.!

மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்து விஜய் நடித்துவரும் படத்தை இயக்கிவருபவர் ஏ. ஆர். முருகதாஸ். இந்த படத்தில் விஜய்யிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். மேலும், படப்பிடிப்பும் தீவிரமாக நடந்து வருகிற நிலையில், இன்னும் படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. சண்டை காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம்-லக்ஷ்மனனை படத்தில் இணைத்துள்ளார்கள்.

இப்படத்தின் வில்லன்களாக ராதா ரவி மற்றும் கருப்பையா நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும், படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. 16 ஆம் தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்து படு வேகமாக நடத்தி வருகிறார்கள்.

விஜய்யின் 62-வது படத்தின் கதையில் தண்ணீர் பிரச்சனையும் இருக்கிறதாம்.!

இந்த நிலையில் படத்தில் அரசியல் கலந்த விவசாயம் குறித்து பேசப்போவதாக சில செய்திகள் முன்பு வெளியானது. ஆனால் தற்போது அரசியல், விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்சனை என இந்த மூன்று விஷயங்கள் குறித்தும் இந்த படம் அமைத்திருக்காம். இந்த படத்தில் விஜய் ஆவேசமாக சமூகத்தில் தவறு செய்து வருபவர்களை தாக்கி வசனம் பேசப்போகிறாராம்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு