செய்தி விவரங்கள்

விக்கி கவுசல், ஆலியா பட் புதிய படம் பெயர் வெளியீடு..!

நடிகர் விக்கி கவுசல், நடிகை ஆலியா பட் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. மேக்னா குல்சரின் இப்படம், ஹரிந்தர் சிக்கா எழுதிய சேமத் என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு தயாரிக்க உள்ளதாவும் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ராஸி என பெயரிடப்பட்டுள்ளது. மேக்னா குல்சர் இயக்கும் இப்படத்தை, ஜங்கிளி பிக்சர்ஸ் மற்றும் தர்மா புரோடெக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் பஞ்சாப், காஷ்மீர், மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இப்படத்தின் சூட்டிங் ஜூலை மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு