செய்தி விவரங்கள்

ஜிஎஸ்டி-யால் ஹேங்கோவர் பார்ட்டி வைக்கும் வெங்கட் பிரபு!!

ஜிஎஸ்டி அமலுக்கு வருவதால் இனி சினிமாவுக்கு வரிச்சலுகையெல்லாம் இருக்காது. இதனால் வரிச்சலுகைக்காக தமிழ் தலைப்பு வைத்தவர்கள் இப்போது துணிச்சலாக ஆங்கில தலைப்பு வைக்க ஆரம்பித்து விட்டார்கள். சென்னை 28ன் இரண்டாம் பாகத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்திற்கு பார்ட்டி என்று தலைப்பு வைத்திருக்கிறார். 

வெங்கட் பிரபு டீமிற்கு பார்ட்டி என்றால் செம ஜாலிதான். அவரது படங்களிலும் பார்ட்டி காட்சி இருக்கும். இப்போது பார்ட்டி என்றே படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக்கையே பார்ட்டி ஸ்டைலில் வெளியிட்டிருக்கிறார். கூடவே ஒவ்வொரு மது பாட்டில்களிலும் படத்தில் நடிப்பவர்களின் பெயரை வெளியிட்டிருக்கிறார். இது ஹாலிவுட்டில் வெளிவரும் ஹேங்கோவர் படத்தின் சாயலில் எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 

பார்ட்டியில் சிவா, ஜெய், கயல் சந்திரன், சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார். அம்மா கிரியேசன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு