செய்தி விவரங்கள்

ரஜினியின் பிறந்தநாளுக்கு 2.0 வெளியீட்டு விழா!!

2010ல் வெளியான எந்திரன் படத்தின் தொடர்ச்சியே 2.0. சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது ரஜினிகாந்தை தவிர இந்த படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே, அடில் உசைன் உட்பட்டோர் நடித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கசிந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது எமி ஜாக்சனும் இந்த படத்தில் ரோபோட்டாக நடிக்கிறார். அக்ஷய் குமார் டாக்டர் ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார்.

ரஜினிகாந்தின் மெகா படமான 2.0 வெளிவர இன்னும் பல மாதங்கள் இருக்கும் பட்சத்தில், இத்திரைப்படம் பற்றின ஒவ்வொரு தகவலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டே போகிறது. அடுத்தப்படியாக இசை வெளியீடு அக்டோபர் மாதம் துபாயில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், ரஜினி பிறந்தநாளையொட்டி, அன்றைய தினம் 2.O படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2.O படம், 2018-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 15 மொழிகளில் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு