செய்தி விவரங்கள்

சாமியை எதிர்க்க தயாராகும் பாபி சிம்ஹா!!

விக்ரம் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படம் சாமி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று தகவல் வந்ததில் இருந்தே ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர். .சாமி 2 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷாவும், கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.முதல் பாகத்தில் நாயகியாக நடித்த த்ரிஷா, இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதைப்படி வயதாகி விடுவதால் சால்ட் அண்ட் பெப்பர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சாமி 2 படத்திற்காக வில்லன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளை தேடிக் கொண்டிருந்தார் ஹரி. இப்போது பாபி சிம்ஹாவை வில்லனாக்க தீர்மானித்து விட்டார், இரண்டாம் பாக கதைப்படி, பாபி சிம்ஹா பெருமாள் பிச்சையின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ஹரி கூறியிருப்பதாவது:

விக்ரமுடன் மோத அவருக்கு ஈடுகொடுக்ககூடிய ஒருவர் தேவை என்பதால் வில்லனை கண்டுபிடிப்பதற்கு நிறைய மெனக்கெட்டேன். வில்லத்தனமும் இருக்க வேண்டும். நல்ல நடிப்பும் இருக்க வேண்டும் அதனால்தான் பாபி சிம்ஹாவை தேர்வு செய்தேன். முதல் பாகத்தின் வில்லன் பெருமாள் பிச்சையை விட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் இரண்டாம் பாகம் வில்லன் இருப்பார் என்றார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு