செய்தி விவரங்கள்

என்ன ஸ்ட்ரைக் நடந்தாலும் நாங்கள் படப்பிடிப்பை தொடங்குவோம்-விசுவாசம்.!

என்ன ஸ்ட்ரைக் நடந்தாலும் நாங்கள் படப்பிடிப்பை தொடங்குவோம்-விசுவாசம்.!

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை, கவர்ந்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் அவருடன் நடிக்கும் பல பிரபலங்கள் சொல்லி கேட்டது உண்டு. இவர் கடைசியாக நடித்த படம் விவேகம். இப்படத்தை இயக்கியவர் இயக்குனர் சிவா. இவர்களின் கூட்டணியில் உருவான வீரம் மற்றும் வேதாளம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்ற படங்கள். தற்போது இவர்களது கூட்டணியில் விசுவாசம் படம் உருவாக உள்ளது.

இந்த படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்று உறுதியாகிவிட்டது. மேலும், சாரதா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு டி. இமான் தான் இசையமைக்கவுள்ளாராம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்க இருப்பதாக முன்பே சில தகவல்கள் வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடக்காது என்று அறிவித்தார்.

என்ன ஸ்ட்ரைக் நடந்தாலும் நாங்கள் படப்பிடிப்பை தொடங்குவோம்-விசுவாசம்.!

இதனால் அனைத்து சினமா சம்மந்தப்பட்ட வேலைகளையும் நிறுத்த முடிவெடுத்த நிலையில், விசுவாசம் படத்தின் படப்பிடிப்பை மட்டும் நடத்த இந்த பட இயக்குனர் சிவா தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளாராம். காரணம் படத்தின் செட் போடும் வேலைகள் தொடங்கிவிட்டதால், சென்டிமெண்டாக இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க கேட்டுக்கொண்டுள்ளாராம் இயக்குனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு