செய்தி விவரங்கள்

தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தி கொண்டிருக்கும் சாயிஷா..!

தமிழ் சினிமாவில் சிம்ரனுக்கு அடுத்து ரசிகர்களைக் கவரும் நாயகி யார் என்பதில் ஒரு வெற்றிடமே இருந்து வருகிறது. நடிப்பு, நடனம், தோற்றம், உடுத்தும் பொருத்தமான ஆடைகள், மாடர்ன் டிரஸ் ஆக இருந்தாலும் சரி, புடவை உள்ளிட்ட குடும்பப் பாங்கான ஆடையாக இருந்தாலும் சரி, ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும். சிம்ரனுக்குப் பிறகு பல நாயகிகள் அறிமுகமானாலும் யாரும் தொடர்ந்து ஹிட் படங்களிலோ அல்லது விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களை மெருகேற்றிக் கொள்ளவில்லை. சிம்ரனுக்குப் பிறகு நடன அசைவுகளின் மூலம் வியக்க வைத்தவர் என யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவே முடியாது. ஆனால், நேற்று வெளியான வனமகன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தின் அறிமுக நாயகி சாயிஷாவின் நடன அசைவுகளைப் பார்த்து வியந்து போய்விட்டார்கள். பாடல்களில் அவருடைய நடன அசைவுகள் சிம்ரனையும் தோற்கடிக்கும் அளவிற்கு மிரட்டலாக இருந்தன என்பது உண்மை. தொடர்ந்து நல்ல படங்களையும், நல்ல கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து, கூடவே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தால் மட்டுமே சாயிஷாவுக்கு தமிழ்த் திரையுலகத்தில் தனி இடம் கிடைக்கும். அதை அவர் புரிந்து கொண்டு நடப்பாரா என்பது அடுத்தடுத்த படங்களின் மூலம்தான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு