செய்தி விவரங்கள்

மெகா பட்ஜெட்டில் மீண்டும் ஒரு பாகுபலி - பிரபாஸ்...!

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்த பாகுபலி-2 படம் இன்னும் பல ஏரியாக்களில் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. அதோடு பல உலக நாடுகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வரும் இப்படம் தற்போது மாஸ்கோவில் நடைபெறும் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளது. ஆக, தொடர்ந்து பாகுபலி-2 படத்திற்கு பல்வேறு பெருமைகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த பூரிப்போடு அடுத்தபடியாக சாஹோ படத்தில் நடிக்கிறார் பிரபாஸ். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது.

சுஜீத் இயக்கும் இந்த படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகிறது. இந்த படத்தில் நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அனுஷ்காவே மீண்டும் பிரபாசுடன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பாகுபலி சரித்திர படத்தில் அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்த பிரபாஸ், இந்த சாஹோ படத்தில் அதைவிட மிரட்டலான சண்டை காட்சிகளில் நடிக்கிறாராம். இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கென்று ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நவீன தொழில் நுட்பத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த சாஹோ படத்தில் விஜய்யின் கத்தி படத்தில் நடித்த இந்தி வில்லன் நீல்நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு