செய்தி விவரங்கள்

நயன்தாரா தான் வேண்டும் என்று சிவகார்த்திகேயன் அடம் பிடிக்க காரணம்..?

சிவகார்த்திகேயன் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வந்தார். அப்போதே அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, அதைத்தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து படத்தில் நடிக்க தொடங்கினார். இரு படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனால், ஒரே பாடலில் பணக்காரனாவது போல, ஒரே படத்தின் மூலம் உயரத்துக்கு போய்விட்டார் சிவகார்த்திகேயன். உயர போவது முக்கியமல்ல, அதைத் தக்கவைத்துக் கொள்வதுதான் முக்கியம் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.

அதனால்தான் நயன்தாரா, சமந்தா என உச்சத்தில் இருக்கும் ஹீரோயின்களை தனது ஜோடியாக்கி வருகிறார். ‘வேலைக்காரன்’ படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன் இயக்கும் படத்திலும் அவரையே ஜோடியாக நியமிக்குமாறு அடம் பிடிக்கிறாராம். காரணம், நயன், சமந்தா, கீர்த்தி சுரேஷ் என ஒருசில நடிகைகளே முன்னணியில் இருக்கின்றனர். அவர்களுடன் நடித்தால் தான் தானும் முன்னணியிலேயே இருக்கலாம் என கணக்குப் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு