செய்தி விவரங்கள்

நாச்சியார் படத்தின் புதிய டீஸர்; திரும்ப சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசிய ஜோதிகா;

நாச்சியார் படத்தின் புதிய டீஸர்; திரும்ப சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசிய ஜோதிகா;

பிரபல தமிழ் சினிமா குடும்பத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டவர் நடிகை ஜோதிகா, இவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே சிவகுமாரின் மகன் மற்றும் நடிகருமான சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தததும் இனி நடிக்கமாட்டேன் என்று கூறிய ஜோதிகா, 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். இந்த படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இவருக்கு மீண்டும் பல ரசிகர்கள் கூடினார்கள். அதுவும் பெண் ரசிகர்கள் தான் அதிகம்.

இவர் தற்போது நாச்சியார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் பாலா. பாலா எடுக்கும் படம் என்றால் அது வேற விதமாக தான் இருக்கும். அந்த வகையில், ஜோதிகா இந்த படத்தின் பெண்களை இழிவு படுத்தும் வார்த்தைகளை பேசுவார். அப்படி பேசி வெளியான இப்படத்தின் டீசர் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பை சந்தித்தது.

நாச்சியார் படத்தின் புதிய டீஸர்; திரும்ப சர்ச்சைக்குரிய வார்த்தையை பேசிய ஜோதிகா;

இருந்தும், படத்திற்கு தேவை அதனால் தான் பேசினேன் என்று கூறினார் ஜோதிகா. அவர் பேசிய அந்த ஒரு வார்த்தைக்காக படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள் சிலர். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் தான் இருக்கிறதாம். எப்போதும் ஒரு படம் என்றால் அதற்கு இசை வெளியீட்டு விழா நடத்துவார்கள் ஆனால் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை. பாடலின் ஆர்வத்தை தூண்டவே இவ்வாறு செய்துள்ளார் இயக்குனர். வரும் 16 ஆம் தேதி ரிலீஸாகயிருக்கும் இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. இதிலும் ஜோதிகா சர்ச்சைக்குரிய வசனத்தை பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு