செய்தி விவரங்கள்

இதோ வந்தாச்சு நடிகர் துல்கரின் அடுத்த காதல் தமிழ் படம்..!

இதோ வந்தாச்சு நடிகர் துல்கரின் அடுத்த காதல் தமிழ் படம்..!

மோலிவுட் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த ஹீரோ தான் பிரபல நடிகர் துல்கர் சல்மான், இவர் தமிழில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வாயை மூடி பேசவும், மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்து அசத்தியுள்ளார். துல்கர் நடித்த ஸோலோ சமீபத்தில் தமிழில் டப் செய்யப்பட்டது. ஒரு நாள் கூட ஓடவில்லை. தேசிங்கு பெரியசாமி என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் துல்கர் சல்மான்.

இதோ வந்தாச்சு நடிகர் துல்கரின் அடுத்த காதல் தமிழ் படம்..!

இந்த படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர். ரீத்துவர்மா இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். காதலும், சாகசங்களும் நிறைந்த பயண கதையான இதில் துல்கர் சல்மான் சாப்ட்வேர் என்ஜினியராக நடிக்கிறார். படத்திற்காக துல்கர் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு