செய்தி விவரங்கள்

ஜேக்கப் வர்கீஸ் உடன் இணைந்து படம் தயாரிக்கயுள்ளார் தனுஷ்..!

ஜேக்கப் வர்கீஸ் உடன் இணைந்து படம் தயாரிக்கயுள்ளார் தனுஷ்..!

ஒரு நடிகராக சாதித்துள்ள தனுஷ், தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவனத்தையும் மற்ற மொழிகளில் கிளை பரப்ப முடிவு செய்துள்ளார். அதன் ஒரு கட்டமாகத்தான் தற்போது மலையாளத்தில் அறிமுக இயக்குனர்களை வைத்து, தரங்கம் மற்றும் மரடோனா என இரண்டு படங்களை தயாரித்து, அதில் தரங்கம் படத்தை சமீபத்தில் ரிலீஸ் செய்தும் விட்டார். அந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. தற்போது அடுத்த முயற்சியாக கன்னட திரையுலகம் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது.

ஜேக்கப் வர்கீஸ் உடன் இணைந்து படம் தயாரிக்கயுள்ளார் தனுஷ்..!

கன்னட தயாரிப்பாளர் ஜேக்கப் வர்கீஸ் என்பவருடன் இணைந்து கன்னடத்தில் புதிய படமொன்றை தயாரிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகனாக ரிஷி என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் சூப்பர்ஹிட்டான ஆபரேசன் அலமேலம்மா படத்தின் மூலம் பிரபலமானவர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு