செய்தி விவரங்கள்

ஹாலிவுட்டையும் தனதாக்கும் ரஜினி... வரலாறு படைத்துள்ள 2.0 ப்ரமோஷன்...

ரஜினி ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் எந்திரன் 2 என்ற சொல்லக்கூடிய 2.0 படத்தின் விளம்பரம் பிரமாண்டமாக ஹாலிவுட்டில் தொடங்கியுள்ளது. இப்படம் சுமார் ரூ 400 கோடிகளுக்கும் மேல் செலவு செய்து உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் Visual Effects பணிகளைத் தவிர மற்ற அனைத்தும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.இப்படம் வெளியாக இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகளை இப்பொழுதே துவங்கியுள்ளனர்.

இப்படம் உலகெங்கும் 100-க்கும் அதிகமான நாடுகளில் வெளியிடவிருப்பதால், உலகம் முழுவதும் பயணம் செய்து விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, ஹாலிவுட்டில் மிகப் பிரமாண்டமாக ஒரு Hot Air Balloon பறக்க விட்டுள்ளனர். அதில் ரஜினி - அக்ஷய் குமார் படங்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரு தமிழ்ப் படத்தின் விளம்பரம் இத்தனை பிரமாண்டமாக ஹாலிவுட்டில் வைக்கப்படுவது இதுவே முதல் முறை. கபாலிக்கு செய்த விளம்பரங்களை விட பல மடங்கு அதிகமாக இந்தப் படத்துக்கு செய்வார்கள் என்றவாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழ் படத்துக்கு பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்படுவது, ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் மிதக்கவைத்துள்ளது, அதே வேலையில், தமிழ்நாட்டில் விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்து போக, விவசாய கடன்களையாவது தள்ளுபடி செய்யுங்கள் என நூதன போராட்டங்கள் பல நடத்தியும் கேட்பாரற்று கிடக்கையில், ஒரு தமிழ் படத்தின் விளம்பரத்திற்கு மட்டும் இவ்வளவு கோடிகள் செலவு செய்வது தேவை தானா என்ற கேள்வியும் பலர் முன்வைக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு