செய்தி விவரங்கள்

Facebook-க்கு தடை, உருவானது kashbook ... இந்திய இளைஞர் சாதனை !

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் வன்முறைக் கொழுந்துவிட்டு எரிந்தபோது பாதுகாப்பைப் பலப்படுத்திய போலீசார், மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இணைய இணைப்புத் தொடர்புகளையும் துண்டித்து. ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்ஸர் பாட் இறந்த செய்தி பரவிய நேரம் அது என்பதால் மாநிலம் முழுக்க பதற்றம் பரவி இருந்தது. இதனை தொடர்ந்து, காஷ்மீர் மாநிலத்தில் Facebook தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் குழப்பத்திற்கிடையே, இரண்டு இளைஞர்கள் தங்கள் தொழில்நுட்பம் சார்ந்த வணிக முயற்சிகளுக்கு பயன்தரும் திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டு சாதித்து காட்டியுள்ளனர்.

15 வயதான ஸியான் ஷாபிக் என்ற இளைஞர் இன்று உலகையே ஆண்டுகொண்டிருக்கும் Facebook மற்றும் சீனாவின் வீச்சாட் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாமாண்டு பொறியியல் பயிலும் உஷேய்ருடன் இணைந்து ஃபேஸ்புக்குக்கு மாற்றாக காஷ்மீருக்கென்று kashbook உருவாக்கியுள்ளார்.

2017, ஏப்ரல் 26ம் தேதி சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, இந்த இணையதளம் தொடங்கப்பட்ட நிமிடங்களிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் காஷ்புக் (kashbook) தளத்தில் இயங்கிவருவதாக ஸியான் ஷாபிக் தெரிவிக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், காஷ்புக்கில் "எந்த நாட்டிற்கு எதிராகவும் தீங்குவிளைவிக்கும் பொருள்" என்று கருதப்படும் எதையும் அனுமதிப்பதில்லை என்பதை தன்னுடைய முக்கிய அறிவிப்பாக செய்துள்ளார் ஸியான்.
இதையடுத்து, யூ டியூப் போன்ற வீடியோ வெளியிடும் இணையதளத்தை உருவாக்கும் திட்டத்தையும் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு