செய்தி விவரங்கள்

2 பில்லியன் பயனாளர்களை தாண்டியது Facebook, இதற்கு என்ன காரணம் தெரியுமா?

இன்று இளைஞர்கள் ஒவ்வொருவரையும் சமூக வலைத்தளங்கள் தான் ஆண்டு வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. Facebook, whatsapp, Instagram,Twitter, Youtube என எப்பொழுதும் நம்மை பிஸியாக வைத்துக்கொள்வதில் இவை போன்ற சமூக வலைத்தளங்களுக்கு தான் முக்கிய பங்குண்டு எனலாம்.

அவ்வாறு சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்க கூடிய Facebook தற்பொழுது புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. அதன்படி 2 பில்லியன் மாத பயனாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. 1 பில்லின்ஸ் பயனாளர்களை அடைந்து அடுத்த 5 ஆண்டுக்குள் 2 பில்லியன் ஆகியுள்ளது அதன் உரிமையாளர் ஸுக்கெர்பேர்கிற்கு மிக பெரும் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை பற்றி அவர், உங்களுடனான இந்த பயணம் என்னை கௌரவப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு தனது கல்லூரி விடுதி நண்பர்களுடன் உரையாடிகொள்ள உருவாக்கப்பட்ட Facebook இன்று உலகையே ஆள்கிறது. ஆரம்ப கட்டங்களில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் பிரபலமான Facebook பிறகு உலகம் முழுவதும் பரவ துவங்கியது.

2 பில்லியன் என்பது, எந்த ஒரு நாட்டின் மக்கள் தொகையை காட்டிலும் அதிகம் மேலும், மொத்த உலக மக்கள் தொகையான 7.5 பில்லியனில் 3ல் ஒரு பங்கை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள லவ் குறியீடானது ஒரு நாளைக்கு 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்துவதாகவும், ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 800 மில்லியன் பேர் எதையாவது லைக் செய்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மைல்கல்லை தொட்டதற்கு Facebook Account வைத்துள்ள ஒவ்வொருவரும் தான் கரணம் எனவும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும், சமீப காலமாக எந்த Link கிளிக் செய்தாலும் Facebook பக்கத்திற்கு போக கூடிய அளவில் அதற்கான விளம்பரமும் அமைந்துள்ளதாகவும், Facebook பயன்படுத்தும் பொழுது நேரம் நகர்வதே தெரியவில்லை அதே வேலையில் அது சலிப்படையாமலும் இருப்பதாகவும் பல மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு