செய்தி விவரங்கள்

வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் மனோ கணேசனுடனான சந்திப்பு!

வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் மனோ கணேசனுடனான சந்திப்பு!

 

வலி வடக்கு பிரதேச சபையின் உறுப்பினரும், இளைஞர் சேவை உத்தியோகத்தரும் ஆகிய சொக்கலிங்கம் சபேசன் அவர்களின் ஏற்பாட்டில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனுடனான சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.

வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசன் ஏற்பாட்டில் ஜெற் விங் ஹொட்டலில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. இக் கலந்துரையாடலில் உடற்கல்வி டிப்ளோமா சங்க தலைவர், உபதலைவர், செயலாளர், சங்க பிரதிநிதிகள் மற்றும் வலிகாமம் உதை பந்தாட்ட லீக் தலைவர் மற்றும் இளைஞர் சேவை அதிகாரியுமான யுகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் மனோ கணேசனுடனான சந்திப்பு!

இதனடிப்படையில் அமைச்சர் மனோகணேசனுடனான சந்திப்பில், வடமாகாண உடற்கல்வி ஆசிரியர் நிஜமனம் குறித்த பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு குறுகிய காலத்தில் முடிவுகள் வழங்குவதாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சபேசனின் ஏற்பாட்டில் மனோ கணேசனுடனான சந்திப்பு!

அதனை தொடர்ந்து யாழ் மாவட்ட இளைஞர், யுவதிகள் வெளிமாவட்டங்களுக்கு செல்கையில், ஏற்படும் மொழி பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், இதற்கு உடனடியாக யாழில் 15 பிரதேச செயலக பிரிவிலும், சிங்கள கற்கை நெறி ஆரம்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கில் காணப்படும் அரச அலுவலங்களில் உதவியாளர்களாக அதிகம் சிங்களவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குபடுவதாக தெரிவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக வேலையற்று காணப்படும் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு சபேசன் அவர்கள் கேட்டு கொண்டதற்கு இனங்க,  பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள, வரும் காலங்களில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாக, வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் இளைஞர் சேவை அதிகாரியுமான சபேசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு