செய்தி விவரங்கள்

யாழ்ப்பாணம் நாவற்குழியில் இளைஞனைத் தாக்கிய மர்ம நபர்!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர்மீது மர்ம நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் நேற்று முந்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 30 வயதான தங்கராசா றொசான் என்பவர் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் சம்பவ தினத்தன்று இரவு தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது யாரோ தோட்டத்துக்கு வெளியே நின்று அவரை அழைக்கும் குரல் கேட்டுள்ளது. குரல் கேட்டு வெளியே வந்தவரை மர்ம நபர் ஒருவர் பொல்லால் தாக்கி விட்டு தப்பியோடியுள்ளார்.

தலையில் காயமடைந்த அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு