செய்தி விவரங்கள்

கூட்டமைப்பிற்கு சிலர் சேறு பூச முயற்சிப்பதாக யோகேஸ்வரன் குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காட்டிக்கொடுத்ததாக தெரிவிக்கும் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் ஒரு காலத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்கு சிலர் சேறு பூச முயற்சிப்பதாக யோகேஸ்வரன்  குற்றச்சாட்டு

எனினும், உண்மை ஒருநாள் வெளிவரும் என  தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,  தற்போது சிலர் கட்சி தலைமைக்கு சேறு பூசி  தம்மை நல்லவர்களாக  காட்ட முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்திபுரம் பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரைக்கும் செய்த அபிவிருத்தி என்ன என்று கேட்கிறார்கள் தாம், மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசாங்கத்தில் எதிர்க்கட்சியாக இருந்தாலும் உள்ளுராட்சியில் நாம் ஆட்சி செய்தால் அனைத்தையும் திறம்பட முன்னெடுக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு