செய்தி விவரங்கள்

இலங்கை படையினர் பங்கேற்பதை தடுக்க யஸ்மின் சூக்கா நடவடிக்கை

ஐக்கிய நாடுகளின் சமாதான படைகளில் இலங்கை படையினர் பங்கேற்பதை தடுக்கும் வகையில் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்தேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கை படையினர் பங்கேற்பதை தடுக்க யஸ்மின் சூக்கா நடவடிக்கை

இதற்கமைய, தற்போது இலங்கையின் 56 விசேட அதிரடிப்படையினர் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் பட்டியலை தயாரித்து வருகிறது.

இந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இலங்கையின் இறுதிப்போரில் பங்கேற்றனர் என்ற அடிப்படையிலேயே குறித்த பட்டியல் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் சட்டத்தரணியுடன் இலங்கை விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்ட மூன்று பேர்கொண்ட நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மின் சூக்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு