செய்தி விவரங்கள்

குவைத்தில் ஸ்ரீலங்கா பணிப்பெண் கொலை ; சந்தேகிக்கும் உறவுகள்

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாக சென்ற இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மாத்தறை  - மொறவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான  சுரேக்கா ஐராங்கனி குனசேகர  என்ற பெண் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி தனியார் முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக குவைட் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 09ஆம்  திகதி குவைத்தில் பணியாற்றிய மற்றொரு இலங்கை பெண் மூலம் அவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், விசவாயு தாக்கத்தால் அவர் உயிரிழந்து விட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

இந்த மாறுப்பட்டக் கருத்துகள் தமக்கு சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும், தனது மனைவியின் சடலம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் கீர்த்தி நந்த எதிரிசிங்க தெரித்துள்ளார்.

தனது மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது கணவர்,  மனைவியின் மரணத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சிட் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 8ஆம் திகதி குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் தொலைப்பேசியில்  உரையாடியுள்ளார்.

பணிப்பெண்களாக வெளிநாடு செல்லும் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு