செய்தி விவரங்கள்

வவுனியா மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்

வவுனியா தெற்கு மற்றும் செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுகளில் வசிக்கும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் சிறுநீரக நோயினால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த பிரதேசங்களுக்கே இவ்வாறு குடிநீர் வழங்கப்படவுள்ளது.

இதற்கென வவுனியாவில் நீர்விநியோகத் திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தளஆய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கும் சீனாவின் தேசிய முழுமையான தாவர ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இது தொடர்பில் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்த ஆவணத்தை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்
பிரபலமாகும் செய்திகள்
சமீபத்திய காணொளிகள்
மேலும் காணொளி செய்திகளுக்கு